உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சந்தானம் பட விழாவில் சிம்பு

சந்தானம் பட விழாவில் சிம்பு

நடிகர் சிம்பு, சந்தானம் இடையே நல்ல நட்பு உள்ளது. விஜய் டிவியில் சில ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு காமெடி செய்து கொண்டிருந்த என்னை, ‛மன்மதன்' படத்தில் அறிமுகப்படுத்தி லட்சங்களில், கோடிகளில் சம்பளம் வாங்க வைத்தவர் சிம்பு தான். அவர் என் நண்பர் மட்டுமல்ல, சினிமாவில் ஒருவகையில் குருவும் கூட'' என்று சந்தானம் அடிக்கடி சொல்வாராம்.

அதனால், தான் இப்போது பலகோடி சம்பளம் வாங்கும் கதைநாயகனாக நடித்து வந்தாலும், சிம்பு நடிக்கும் படத்தில் காமெடியனாக நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் சந்தானம். பதிலுக்கு சிம்வும் தனது நண்பர் சந்தானத்துக்காக பல விஷயங்களை செய்து இருக்கிறார். இப்போது நண்பன் சந்தானத்துக்காக அவர் கதைநாயகனாக நடிக்கும் ‛டிடி நெக்ஸ்ட் லெவல்' பட விழாவில் சிம்பு கலந்து கொள்கிறார்.

சென்னை சத்யம் தியேட்டரில் இன்று (மே 5) மாலை நடக்கும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டு சந்தானம் குறித்து, அந்த படம் குறித்து பேசப்போகிறார். பொதுவாக, தன் நடிக்கும் படங்கள் தவிர மற்றவர்கள் பட விழாக்களுக்கு சிம்பு அதிகம் செல்வது இல்லை. ஆனாலும், சந்தானத்துக்காக தனது பாலிசியை உடைத்து இன்றைய விழாவில் கலந்து கொள்கிறார்.

2012ம் ஆண்டு நடந்த சந்தானம் நடித்த, ‛கண்ணா லட்டு தின்ன ஆசையா' படவிழாவிலும் சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போல் 2017ல் சக்கபோடு போடு ராஜா பட இசை வெளியீட்டு விழாவிலும் சிம்பு, தனுஷ் உடன் பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !