ரெட்ரோ 4 நாள் தமிழக வசூல் இத்தனை கோடியா?
ADDED : 153 days ago
சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களையும் தாண்டி பொதுவான ரசிகர்களும் திரையரங்குகளில் வந்த வண்ணம் உள்ளன. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் முதல் நான்கு நாட்களில் வசூல் நன்றாக இருப்பதாக திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கிறது. முதல் நான்கு நாட்களில் இந்ததிரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 45 கோடி வசூல் செய்துள்ளது. சூர்யா நடித்த படங்களிலேயே தமிழகத்தில் முதல் வார இறுதியில் அதிக வசூல் செய்த படமாக இந்த ரெட்ரோ திரைப்படம் அமைந்துள்ளது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், கருணாகரன், ஜெயராமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார்.