தனுஷின் ஹிந்தி படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்
ADDED : 151 days ago
ராஞ்சானா, அட்ராங்கி ரே ஆகிய படங்களை தொடர்ந்து ஆனந்த் எல் ராய், தனுஷ், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'தேரே இஸ்க் மெயின்' . ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டமாக டில்லி, பனாரஸ் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் கதாநாயகியாக கிர்த்தி சனோன் நடிக்கிறார். இந்த படம் காதலை மையப்படுத்தி உருவாகி வருகிறது .இதன் பெரும்பாலான காட்சிகள் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக பிரகாஷ் ராஜ் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் திருவிளையாடல் ஆரம்பம், வேங்கை, அசுரன், திருச்சிற்றம்பலம், ராயன் போன்ற படங்கள் வெளியாகி உள்ளன.