உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ்

மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் பாடிய தனுஷ்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி உலகம் முழுக்க சென்று இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அந்த வகையில், மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் என்ற கிரிக்கெட் மைதானத்தில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். அப்போது தனது ஐம்பதாவது படமான ராயனில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான அடங்காத அசுரன் என்ற பாடலை பாடியுள்ளார் தனுஷ். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் ராயன் படத்தை அடுத்து ஹிந்தியில் தனுஷ் நடித்து வரும் தேரே இஸ்க் மெயின் என்ற படத்திற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !