உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரியா பவானி சங்கருக்கு என்னாச்சு? எங்கே இருக்கிறார்?

பிரியா பவானி சங்கருக்கு என்னாச்சு? எங்கே இருக்கிறார்?

தனியார் டிவியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் பிரியா பவானி சங்கர். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் சீரியல் மூலமாக பிரபலமானார். அடுத்து சினிமாவில் என்ட்ரி ஆகி மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன. யானை, ருத்திரன், பொம்மை, ரத்னம், இந்தியன் 2 போன்ற படங்களில் அவர் நடிப்பும் விமர்சனம் செய்யப்பட்டது. இதனால், அவர் சற்றே விரக்தி ஆனார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி 2 படம், பிரியா பவானி சங்கருக்கு சந்தோஷத்தை தந்தது. படத்தின் வெற்றி அவரை உற்சாகம் அடைய வைத்தது. ஆனால் அடுத்த சில மாதங்கள் அவரை சினிமா நிகழ்ச்சியில், சென்னையில் பார்க்க முடியவில்லை. புதுப்படங்களிலும் கமிட்டாகவில்லை, அவருக்கு திருமணமாகிவிட்டது. வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் என்று தகவல்கள் பரவின.

பிரியா பவானி சங்கருக்கு என்னாச்சு என்று விசாரித்தால் அவர் தனது காதலன் ராஜவேலை சந்திக்க ஆஸ்ரேலியா சென்றுவிட்டார். சில மாதங்கள் அங்கே இருந்தார். அதனால், சென்னையில் இல்லை. இப்போது திரும்பிவிட்டார். சில படங்களில் கமிட்டாகி இருக்கிறார். மற்றபடி, அவரை பற்றி வரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை' என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !