மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
143 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
143 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
143 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
143 days ago
நடிகர் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிவித்தார். இதற்கு ரவி மோகன், பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் நெருக்கமாக பழகி வருவது தான் காரணம் என்று சொல்லப்பட்டது. நீதிமன்றத்தில் இவர்கள் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகின்றது. அவ்வப்போது ரவி மோகனின் மனைவி ஆர்த்தி சோசியல் மீடியாவில் தனது கணவர் குறித்தும், தன் பக்கம் உள்ள நியாயங்கள் குறித்தும் சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். சமீபத்தில், ஐசரி கணேஷ் மகளின் திருமணத்திற்கு கெனிஷாவுடன் ஜோடியாக வருகை தந்தார் ரவி மோகன். இது திரையுலகினர், ரசிகர்கள் இடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து ஆர்த்தி ரவி இவர்களின் இந்த ஜோடியான வருகை குறித்து விமர்சிக்கும் விதமாக நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். நடிகைகள் ராதிகா, குஷ்பு போன்றவர்கள் ஆர்த்திக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இந்த நிலையில் ஆர்த்தியின் பதிவுக்கு பதிலடி தருவது போல தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கெனிஷா.
அதில் அவர் கூறும்போது, “ஒரு ஆண்மையுள்ள ஆண் ஒருபோதும் குழப்பமான உணர்ச்சி ஆற்றலால் ஈர்க்கப்பட மாட்டான். அவனது இதயம் அமைதியை உணரும் பெண்ணின் பக்கம் சாய்கிறது.. மென்மை என்பது ஒரு செயல்திறன் அல்ல, ஆனால் ஒரு அமைதியான சக்தி.. அவள் அவனது வலிமையுடன் போட்டியிடுவதில்லை, ஆனால் அதை சமநிலைப்படுத்துகிறாள்.. அந்த இயக்கத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்”. கூறியுள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் இரு தரப்பினர் இடையே வார்த்தை போர துவங்கியுள்ளது என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.
143 days ago
143 days ago
143 days ago
143 days ago