மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
143 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
143 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
143 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
143 days ago
புஷ்பா 2 படத்துக்கு பிறகு அல்லு அர்ஜுனும், ஜவான் படத்திற்கு பிறகு அட்லியும் இணையும் படம் 800 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மிருணாள் தாக்கூர், ஜான்வி கபூர் மற்றும் ஒரு ஹாலிவுட் நடிகை ஒருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இந்த படம் வேற்றுக்கிரகம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாக இருக்கிறது. ஏற்கனவே இதுபோன்ற கதைக்களத்தில் ஹாலிவுட்டில் சில படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்த படங்களுக்கு இணையான தரத்தில் இந்த படத்தையும் இயக்கப் போகிறார் அட்லி.
முக்கியமாக இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு பயிற்சி பட்டறை மூலம் அல்லு அர்ஜுனுக்கு புதுமையான நடிப்பு பயிற்சி கொடுப்பதோடு, அவரது கெட்டப்பையும் மாற்றுகின்றனர். அதனால் அடுத்த மாதத்தில் இருந்து பயிற்சி பட்டறையில் கலந்து கொள்ளும் அல்லு அர்ஜுன், படப்பிடிப்புக்காக முழுமையாக தன்னை தயார் படுத்தி கொள்ளப் போகிறார்.
இந்த படத்தில் வில்லன்களுடன் அல்லு அர்ஜுன் மோதும் ஒரு சண்டை காட்சி தண்ணீருக்கடியில் படமாக்கப்பட உள்ளதாம். இந்த காட்சிக்காக தண்ணீருக்கடியில் 20க்கும் மேற்பட்ட சிறிய ரக கோப்ரா கேமராக்களை பொருத்தி படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த கதைக்களத்துக்காக அல்லு அர்ஜுனின் ஹேர் ஸ்டைல் மட்டுமின்றி அவரது பாடி லாங்குவேஜ் பெரிய அளவில் மாற்றி இதுவரை இல்லாத அளவுக்கு அவரை புதுமையான கெட்டப்பில் வெளிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அட்லி.
143 days ago
143 days ago
143 days ago
143 days ago