மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
141 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
141 days ago
இந்தியத் திரையுலகத்தில் 100 கோடி வசூல் என்பது 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பமானாலும் 2008 முதல்தான் அடுத்தடுத்து பல 100 கோடி படங்கள் வர ஆரம்பித்தது. இப்போது 100 கோடி என்பதை விட 1000 கோடி என்பதுதான் ஒரு பெரும் மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இருந்தாலும் மலையாளத் திரையுலகத்தில் அவர்களது மாநிலமான கேரளாவில் இதுவரையில் எந்த ஒரு படமும் 100 கோடி வசூல் சாதனையைப் புரிந்ததில்லை. தற்போது அப்படிப்பட்ட ஒரு புதிய சாதனையை முதல் சாதனையைப் படைத்துள்ளது மோகன்லால் நடித்து வெளிவந்த 'தொடரும்' மலையாளப் படம்.
உலக அளவில் மொத்தமாக 200 கோடி வசூலைப் பெற்றுள்ள படம் கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூல் என்பது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மோகன்லால் நடித்து அதிக பொருட்செலவில் தயாரான 'எல் 2 எம்புரான்' படம் கூட அங்கு 100 கோடி வசூலிக்கவில்லை. ஆனால், குறைந்த பொருட்செலவில் தயாரான 'தொடரும்' படம் இப்படி ஒரு சாதனையைப் படைத்திருப்பது பெரிய விஷயம்.
இத்தனைக்கும் மோகன்லால் நடித்து வந்த 'த்ரிஷ்யம்' படம் அளவிற்கு இப்படம் தரமான ஒரு படம் என்ற பெயரைப் பெறவில்லை. இருப்பினும் வசூலில் சாதனை புரிவதுதான் பலருக்கும் புரியாத புதிராக உள்ளது.
141 days ago
141 days ago