மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ்
ADDED : 142 days ago
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தின் ஹிந்தி ரீ-மேக்கான பேபி ஜான் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஆனால் இந்த படம் வரவேற்பை பெறவில்லை. திருமணத்திற்கு பின் வேறு படங்களில் நடிக்காமல் கதை மட்டுமே கேட்டு வந்தார் கீர்த்தி சுரேஷ்.
இந்நிலையில் ஹிந்தியில் ஒரு படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி உள்ளாராம். ராஜ்குமார் ராவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார். இந்தியாவின் தற்போதைய கல்விமுறை பற்றி இப்படம் பேச உள்ளதாம். விரைவில் படத்திற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.