மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
139 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
139 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
139 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
139 days ago
40 வருடங்களுக்கு மேலாக திரையுலகை முன்னணி இடத்தில் அதுவும் கதாநாயகனாகவே நடித்து வரும் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி போன்றவர்களின் திரையுலக பயணத்தில் பல ஆச்சரியமான விஷயங்கள் நடைபெற்று இருக்கும். மோகன்லால் அறிமுகமான முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் பூர்ணிமா பாக்யராஜ். அப்போது பூர்ணிமாவுக்கு திருமணம் ஆகவில்லை. ஆனால் பின்னாளில் அவரது மகள் சரண்யாவும் போட்டோகிராபர் என்கிற படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்த ஆச்சரிய நிகழ்வும் நடந்தது.
அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் படத்தில் கூட ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடைபெற்றுள்ளது. படம் பார்க்கும்போது யாரும் அதை கவனிக்காமல் விட்டாலும் கூட, சமீபத்தில் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்த நடிகை ராணி சரண் என்பவர் படப்பிடிப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளதன் மூலம் இந்த விஷயம் வெளியே தெரிய வந்துள்ளது.
மேலே உள்ள புகைப்படத்தில் மோகன்லாலின் அருகே நிற்கும் மூன்று நடிகர்களின் தந்தைமார்களும் மோகன்லாலின் பல படங்களில் அவருடன் நண்பர்களாக, வில்லனாக பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் தான். அதிலும் தொடரும் படத்தில் கொடூரமான சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த பினு பப்புவின் தந்தை குதிரவட்டம் பப்பு. பல படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும் மணிச்சித்திரத்தாழு படத்தில் இவர்களது காமெடி காட்சி ரொம்பவே பிரசித்தம்.
மோகன்லாலுக்கும் பினு பப்புவுக்கும் நடுவில் நிற்கும் நடிகர் சோபி திலகன். இவரது தந்தை திலகனை பற்றி சொல்லத் தேவையில்லை. மோகன்லாலுடன் பல படங்களில் இணைந்து நடித்தவர். அதேபோல படத்தில் இருக்கும் இன்னொருவர் ராணி சரண். மோகன்லாலுடன் பல படங்களில் இணைந்து நடித்த நடிகர் மஞ்சேரி சந்திரன் என்பவரின் மகள் தான் இவர். இந்த மூவருடனும் ஒரு காட்சியில ஒன்றாக நடித்தபோது, மோகன்லால், அவர்களிடம் உங்கள் அப்பாக்களுடனும் நடித்தேன். இப்போது உங்களுடனும் நடிப்பது உண்மையிலேயே ஒரு ஆசீர்வதிக்கப்பட விஷயம் தான் என்று சொன்னதுடன், அனைவரும் ஒன்றாக போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று கூறி இந்த புகைப்படத்தை எடுக்க சொன்னாராம். இந்த தகவலை கூறி நடிகை ராணி சரண் இந்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.
139 days ago
139 days ago
139 days ago
139 days ago