பெயரை மாற்றிய நடிகர் ஹம்சவர்தன்; 2 படங்களிலும் 'கமிட்' ஆனார்
'புன்னகை தேசம், ஜூனியர் சீனியர், மந்திரன், பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹம்சவிர்தன். மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகனான இவரின் மனைவி சாந்தி, கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, பின்னர் மூச்சு திணறல் பிரச்னையில் உயிரிழந்தார். இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை புதுச்சேரியில் வைத்து 2வது திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது.
ஹம்சவர்தன் - நிமிஷாவின் திருமண வரவேற்பு மே 18ல், நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் விமரிசையாக நடைபெற்றது. இரு வீட்டு பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்றனர். இந்த நிலையில், ஹம்சவர்தன் தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றிக்கொண்டுள்ளார். மேலும், இரண்டு புது படங்களில் நடிக்கவும் லியோ ஹம்சவர்தன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படங்களின் முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.