ஜூன் இரண்டாம் தேதி ஓடிடியில் வெளியாகும் 'டூரிஸ்ட் பேமிலி'
ADDED : 153 days ago
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு குடும்பம் சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து படமாக்கி இருந்தார்கள். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்ததால் 7 கோடியில் உருவான இந்த படம் மூன்று வாரங்களில் 75 கோடி ரூபாய் வசூலித்து சாதனை செய்தது.
இந்த நிலையில் தற்போது இந்த டூரிஸ்ட் பேமிலி படம் வருகிற ஜூன் இரண்டாம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். தியேட்டர்களில் ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்ற டூரிஸ்ட் பேமிலிக்கு ஓடிடியிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழு எதிர்பார்க்கிறது.