சிறுமிகளின் ரீல்ஸ்களை த்ரிஷா ஷேர் செய்தது சரியா ?
ADDED : 141 days ago
ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைப்' படத்தில் இடம் பெற்றுள்ள 'சுகர் பேபி' பாடல் சமீபத்தில் யு டியூப் தளத்தில் வெளியிடப்பட்டது. அதில் த்ரிஷாவின் நடனம் ஒரு 'கெட்ட ஆட்டம்' ஆக இருந்தது. 'சுகர் பேபி' என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள பலரும் கூகுளில் தேடினார்கள்.
வயதான ஆண் ஒருவருடன் நெருங்கிப் பழகும் இளம் பெண் என்பதுதான் 'சுகர் பேபி'க்கு அர்த்தம். பொதுவாக எந்தப் பாடல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றாலும் அதற்கு உடனடியாக ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகும். இந்தப் படத்திற்கும் அப்படியான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. ஆனால், அந்த வீடியோக்களை சிறுமிகள் சிலர் எடுத்துள்ளதை த்ரிஷா அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.