உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ்

ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ்

நடிகை அனுஷ்காவை திரையில் பார்த்து வெகுநாளாகிவிட்டது. பாகுபலி என்ற வெற்றி படத்தின் ஹீரோயின் என்றாலும், தனிப்பட்ட வாழ்க்கை, வயது, உடல்எடை காரணமாக அவர் நடிப்பதை குறைத்துக் கொண்டார். பாகுபலிக்குபின் சில படங்களில் மட்டுமே நடித்தார். இந்நிலையில், அவர் நடித்த காதி என்ற படம் ஜூலை 11ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் அனுஷ்காவுடன் விக்ரம் பிரபு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

இது கிரிப்பிங் ஆக் ஷன் திரில்லர் பாணியில் உருவாகி உள்ளது. முதன்முறையாக அதிரடி ஆக் ஷன் வேடத்தில் அனுஷ்கா நடிப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் உருவானாலும், தமிழ், கன்னடம், மலையாளத்திலும் ரிலீஸ் ஆகிறது.

அனுஷ்காவுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் பிரபாஸ் நடித்த ராஜாசாப் படம், டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் என்று நேற்று போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படமும் பான் இந்தியா படமாக வளர்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !