ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்'
ADDED : 138 days ago
நடிகையும், இயக்குனருமான ரேவதி மற்றும் சித்தார்த் ராமசுவாமி இணைந்து இயக்கியுள்ள புதிய வெப் தொடர் 'குட் ஒயிப்' . இதில் பிரியாமணி, ஆரி அர்ஜூனன், சம்பத், அம்ரிதா ஸ்ரீனிவாசன் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
நடிகை பிரியாமணியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். குடும்ப பின்னணியில் நடக்கும் ஒரு சட்டப்போராட்டத்தை மையமாக வைத்து இந்த வெப் தொடரை எடுத்துள்ளனர். இந்த வெப் தொடர் விரைவில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பாகும் என குறிப்பிட்டுள்ளனர்.