மேலும் செய்திகள்
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
93 days ago
பிரேம்ஜியின் மனைவிக்கு வளைகாப்பு
93 days ago
மலையாள நடிகர் விநாயகன் தமிழில் திமிரு, மரியான் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்தபோது மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதேசமயம் அவர் அடிக்கடி பொதுவெளியில் சர்ச்சைகளில் சிக்குவதை வாடிக்கையாகவும் வைத்துள்ளார். குறிப்பாக அவருக்கு இருக்கும் குடிப்பழக்கமும் சட்டென கோபப்படும் சுபாவமும் அடிக்கடி அவரை காவல் நிலையம் வரை இழுத்துச் சென்று விடுகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் விநாயகன்.
அந்த பதிவில் அவர் கூறும்போது, “யார் முழுவதும் குடிக்கு அடிமையாக இருக்கிறார்களோ, யார் தங்களது குடிப்பழக்கத்தால் உடல் ரீதியாக ரொம்ப பலவீனப்பட்டு எழுந்து நிற்கவே நான்கு பேரின் உதவி தேவைப்படும் நிலையில் இருகிறார்களோ, அப்படிப்பட்டவர் போதை பொருட்களை பயன்படுத்தாதீர்கள் என்று பொது மேடையில் லெக்சர் எடுப்பதை பார்க்கும்போது ஒரு பக்கம் காமெடியாகவும், சோகமாகவும் இருக்கிறது. இது போன்ற சடலங்களை மேடைக்கு கொண்டு வராதீர்கள்.
ஆல்கஹால், கஞ்சா அல்லது பெண் எல்லாமே போதை தான். சொந்தமாக நிற்க முடியாமல், டெக்னாலஜி பற்றி எந்த புரிதலும் இல்லாமல் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்கிறீர்களா? தங்களது குழந்தைகளை சினிமாவில் வலுக்கட்டாயமாக தள்ளி பணம் சம்பாதிப்பதே ஒருவித போதைக்கு அடிமையான விஷயம் தான். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முடிவில் இருந்தால் பேசாமல் வீட்டுக்கு போய் அமைதியாக இருந்து அங்கேயே உயிரை விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
இந்த பதிவை விநாயகன் எழுதுவதற்கு தற்போது பலராலும் ஒரே ஒரு காரணம்தான் சுட்டிக் காட்டப்படுகிறது. அதாவது சமீபத்தில் சீனியர் நடிகரான சீனிவாசன் ஒரு பள்ளி விழாவில் கலந்து கொண்டு பேசிவிட்டு நடந்து சென்றபோது திடீரென தடுமாறி விழுந்தார். அவரை சில பேர் உடனடியாக தாங்கி பிடித்தார்கள். சில வருடங்களுக்கு முன்பு சீனிவாசன் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு சினிமாவில் நடிப்பதிலிருந்து ஒதுங்கி இருந்தார். அதற்கு அவருடைய மதுப்பழக்கமும் காரணம் என்று சொல்லப்பட்டது. தற்போது அவர் மது பழக்கத்திற்கு எதிராக மேடைகளில் பேசி வருகிறார். இதனை தொடர்ந்து விநாயகன் அவர் மீது தான் இப்படி ஒரு குற்றச்சாட்டை மறைமுக பதிவாக வெளியிட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது.
93 days ago
93 days ago