மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
95 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
95 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
95 days ago
கடந்த 2007ல் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான படம் தாரே ஜமீன் பர். ஒரு சிறுவனுக்கும் அமீர்கானுக்குமான பாசப்பிணைப்பை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படத்தை அமீர்கானே இயக்கியிருந்தார். இந்த நிலையில் கிட்டத்தட்ட 19 வருடங்கள் கழித்து இதன் இரண்டாம் பாகம் என்று சொல்லும் விதமாக சிதாரே ஜமீன் பர் என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. வரும் ஜூன் 20-ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
வழக்கமாக ஒரு படம் வெளியாகி எட்டு வாரங்கள் கழித்து ஓடிடியில் ஒளிபரப்பாகும். ஆனால் இந்த முறை இந்த படத்தை எட்டு வாரங்கள் கழித்து யு-டியூப்பில் நேரடியாக திரையிட முடிவு செய்து இருக்கிறார் அமீர்கான். இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி ரசிகர்கள் பார்க்க முடியும்.
அதே சமயம் சமீபத்தில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்து கொண்ட அமீர்கானிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் இந்த படம் உருவாக காரணமாக இருந்த தாரே ஜமீன்தார் திரைப்படத்தின் ஒரு சில காட்சிகளையாவது நீங்கள் ரசிகர்களுக்கு காட்டலாமே என்று கேட்டார். உடனடியாக அப்போதே முடிவு எடுத்த அமீர்கான், விரைவில் தனக்கென சொந்தமாக அமீர்கான் டாக்கீஸ் என்கிற பெயரில் ஒரு யு-டியூப் சேனலை ஆரம்பிப்பதாகவும் தாரே ஜமீன் பர் திரைப்படத்தை இலவசமாகவே ஒன்றிரண்டு வாரங்களுக்கு பார்த்துக் கொள்ளும் வசதியை செய்து தருவதாகவும் மேடையிலேயே உறுதி அளித்துள்ளார்.
95 days ago
95 days ago
95 days ago