விஜய்சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக நிவேதா தாமஸ்?
ADDED : 94 days ago
பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் தெலுங்கில் அடுத்தடுத்து கடைசியாக இயக்கிய இரண்டு படங்களும் வரவேற்பை பெற தவறின. இந்த நிலையில் நடிகர் விஜய்சேதுபதியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் பூரி ஜெகன்நாத். இதில் கதாநாயகியாக கபாலி புகழ் ராதிகா ஆப்தே நடிப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்று ராதிகா ஆப்தே சொல்லிவிட்டார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நடிகை நிவேதா தாமஸ் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற செய்தி தற்போது வெளியாகி உள்ளது. சினிமாவில் கதாநாயகியாக நடித்ததை விட பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் ஹீரோக்களின் மகளாகவும் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நிவேதா தாமஸ்.