ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை!
ADDED : 94 days ago
கடந்த 1992ம் ஆண்டில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த், சரத்பாபு, குஷ்பு, மனோரமா, ராதாரவி ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'அண்ணாமலை'. ரஜினியின் திரை வாழ்க்கையை அண்ணாமலைக்கு முன்பு, பின்பு என பிரிக்கலாம் என்கிற அளவிற்கு இந்த படத்தின் வெற்றி அமைந்தது.
தற்போது கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு பிறகு அண்ணாமலை படத்தை 4K தரத்தில் தமிழகம் மற்றும் கேரளாவில் வருகின்ற டிசம்பர் 12, ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்வதாக இன்று அறிவித்துள்ளனர்.