மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
96 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
96 days ago
நிஜத்தில் டாக்டரான ஐஸ்வர்ய லட்சுமி மாமன் படத்தில் டாக்ராகவே நடித்தார். அந்த கேரக்டர் பேசப்பட்டது. படம் ஹிட். இந்நிலையில், இன்று வெளியான தக் லைப் படத்திலும் அவர் டாக்டராக கவுரவ வேடத்தில் வருகிறார். கதைப்படி அவர் சிம்பு தங்கையாக வருகிறார். அவருக்கும் கமல்ஹாசனுக்குமான காட்சிகளும், அவருக்கும் சிம்புவுக்குமான காட்சிகளும் படத்துக்கு பலம் என்று கமென்ட் வந்துள்ளது. உணர்ச்சிகரமான அந்த காட்சியில் சிறப்பாக நடித்து இருக்கிறார் ஐஸ்வர்யலட்சுமி. படத்தின் கதையும் அவரிடம் ஆரம்பித்து அவரிடமே முடிகிறதாம்.
கதைப்படி திரிஷாவுக்கு பாடகி வேடம் என்று முன்பு சொல்லப்பட்டது. ஆனால், படம் பார்த்தவர்கள் அவர் பாரில் ஆடுபவராக வருகிறார் என்கிறார்கள். தக் லைப்பில் திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சானியா மல்கோத்ரா(ஒரு பாடலுக்கு மட்டும்), லப்பர் பந்து சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , அபிராமி ஆகிய 5 ஹீரோயின்கள் நடித்து இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.
96 days ago
96 days ago