நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த 'டிஎன்ஏ' ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 204 days ago
'ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா' படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ள படம் 'டிஎன்ஏ'.அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் இறுதிகட்டப் பணிகள் முடிவடையாமல் நீண்ட நாள் இந்த படம் தயாரிப்பு நிலையிலேயே இருந்தது. தற்போது பணிகள் முடிக்கப்பட்டு படம் வருகிற 20ம் தேதி வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்குமார் தயாரித்துள்ள இப்படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது.
படத்தின் ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமையினை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இசை உரிமையினை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் பட்ஜெட்டை கணக்கிடும்போது அது இந்த உரிமங்கள் மூலம் மீட்கப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.