உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா

நடிப்பா? தயாரிப்பா?: யோசனையில் ரம்பா

நடிகை ரம்பா சென்னையில் செட்டில் ஆகிவிட்டார். கனடாவில் வசித்தவர் இப்போது சினிமாவில் நடிக்க வேண்டும். படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு வந்துவிட்டார் என தகவல். ரம்பா பட கம்பெனியில் நடிக்க, படம் இயக்க, பணியாற்ற பலர் ஆர்வமாக இருக்கிறார்கள். காரணம், ரம்பாவின் கணவருக்கு சில ஆயிரம் கோடி சொத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம், இன்றைய சினிமா மோசமாக இருக்கிறது. படம் தயாரிப்பது ரிஸ்க். உங்க அண்ணன் கூட படம் தயாரித்துதான் கடனாளி ஆனார். ஆகவே, கவனமாக அடியெடுத்து வைக்க வேண்டும் அவர் நலம் விரும்பிகள் அட்வைஸ் செய்கிறார்களாம். ஜோதிகா, சிம்ரன் மாதிரி ரீ-என்ட்ரி ஆக வேண்டும். பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ரம்பா மனதில் இருக்கிறதாம். இதற்கிடையில் தனது 49வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியிருக்கிறார் ரம்பா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !