உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப்

இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் தக்லைப். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படம் நேற்று திரைக்கு வந்து முதல் காட்சி திரையிடப்பட்டதில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதில், இந்த படம் இந்தியாவில் மட்டும் நேற்று 17 கோடி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் மட்டும் இந்த படம் வெளியாகவில்லை. அதோடு, நேற்று முதல் நாளில் பெருவாரியான தியேட்டர்களில் 50 சதவீதம் கூட ரசிகர்கள் கூடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து திரைக்கு வந்த இந்தியன் 2 படம் கூட முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் தக்லைப் படம் அதைவிட குறைவாக வசூலித்து பட குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !