உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா

திருமண வேலைகளுக்கு இடையே டப்பிங்கை முடித்த நாகார்ஜுனா


தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட படங்களில் தற்போது நடித்து வரும் நாகார்ஜுனா இந்த மாதம் ஜுன் 20ம் தேதி வெளியாகும் 'குபேரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படத்திற்கான டப்பிங்கை அவர் பேசி முடித்துள்ளார்.

அவரது மகன் அகில் அக்கினேனிக்கு நேற்றுதான் ஹைதராபாத்தில் திருமணம் நடந்தது. நாளை ஜுன் 8ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதற்காக இருக்கும் எவ்வளவோ வேலைகளுக்கு மத்தியில் அவர் 'குபேரா' படத்தின் டப்பிங்கை முடித்துக் கொடுத்துள்ளார்.

சீனியர் நடிகர்கள் பலரும் அவர்கள் வேலைகளை எப்போதுமே சரியாக முடித்துக் கொடுப்பது வழக்கம். கடந்த நாற்பது வருடங்களாக திரையுலகில் இருக்கும் நாகார்ஜுனாவின் இந்த சின்சியாரிட்டி பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

'குபேரா' படத்தைத் தொடர்ந்து 'கூலி' படத்திலும் நடித்துள்ளார் நாகார்ஜுனா. 80களின் இறுதியில் அவர் நடித்து வெளிவந்த டப்பிங் படங்களான 'இதயத்தைத் திருடாதே, உதயம்' அந்தக் கால இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. அது போல இந்த வருடம் அவருக்கு நேரடி தமிழ்ப் படங்கள் மூலம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !