உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன்

தமிழர்கள் ரசனை குறைந்தவர்களா? இயக்குனர் ஞானராஜசேகரன்

காமராஜ் படத்தை இயக்கிய ஏ.ஜெ.பாலகிருஷ்ணன் அடுத்து திருவள்ளுவர் வாழ்க்கையை திருக்குறள் என்ற பெயரில் சினிமாவாக எடுத்திருக்கிறார். இளையராஜா இசையமைக்கிறார். இந்த பட பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜா கலந்து கொள்ளவில்லை. ஆனாலும், மோகமுள், பாரதி, பெரியார் படங்களை எடுத்த இயக்குனர் ஞானராஜசேகரன் கலந்துகொண்டார்.

அவர் பேசுகையில், ‛‛தமிழை விட மலையாளத்தில் நல்ல படங்கள் அதிகம் வருகிறது. மலையாள ரசிகர்கள் ரசனை வேறு என்கிறார்கள். நான் கேரளத்தில் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அவர்களை விட தமிழக ரசிகர்கள் ரசனை சிறந்ததுதான். இல்லாவிட்டால் நான் 6 நல்ல படங்களை எடுத்திருக்க முடியாது. படங்களை ரசிகர்களை கொண்டு போய் சேர்ப்பதில் சில பிரச்னைகள் இருக்கிறது. தியேட்டர் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. மற்றபடி நல்ல படங்கள் தமிழில் அதிகம் வருகிறது, டூரிஸ்ட் பேமிலி கூட அப்படிதான் வந்தது'' என்றார்.

இயக்குனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ‛‛நான் படத்தை முடித்துவிட்டு இளையராஜாவிடம் போனேன். அவர் எதுவும் பேசாமல் இந்த படத்துக்கு சிறந்த இசையை கொடுத்தார். திருவள்ளுவராக கலைசோழனும், வாசுகியாக தனலட்சுமியும் நடித்து இருக்கிறார்கள். விரைவில் படம் ரிலீஸ்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !