மேலும் செய்திகள்
கூலி: அமெரிக்காவில் 7 மில்லியன் வசூல்
94 days ago
ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா?
94 days ago
தக் லைப் படம் குறித்து வரும் விமர்சனங்கள், சமூகவலைதளங்களில் பரவும் டிரோல்கள் படக்குழுவை அதிகம் பாதித்து இருக்கிறது. குறிப்பாக, அதில் ஹீரோயினாக நடித்த திரிஷாவை ரொம்பவே அப்செட் ஆக்கியுள்ளதாம். மணிரத்னம் இயக்கத்தில் நான் நடித்த பொன்னியின் செல்வனை கொண்டாடினார்கள். குந்தவை என் சினிமா வாழ்க்கையில் முக்கியமான பாத்திரமாக அமைந்தது. ஆனால், தக் லைப் இந்திராணி கேரக்டரை திட்டி தீர்க்கிறார்கள். ஒரு சிலர் கமல், சிம்பு கேரக்டருக்கு இடையேயான அந்த கேரக்டரின் காதல் காரணமாக ஆபாச வார்த்தைகளால் விமர்சனம் செய்கிறார்கள். சில மலையாள பிட் படங்களுடன் ஒப்பிடுகிறார்கள்.
அது ஒரு படம், அது ஒரு கேரக்டர். நான் இயக்குனர் சொன்னபடி நடித்தேன், அவ்வளவுதான், மணிரத்னம், கமல்ஹாசன் இணைந்த கூட்டணியை இப்படி கடுமையாக விமர்சனம் செய்யலாமா? நான் என்ன செய்தேன். சோஷியல் மீடியாவை திறந்தாலே பயமாக இருக்கிறது. ஒரு சினிமாவை வாழ்க்கையுடன் ஒப்பிடுவது ஏன் என்று புலம்புகிறாராம். கதை, திரைக்கதை சரியில்லாத காரணத்தால்தான் இவ்வளவு பிரச்னை. அடுத்த படத்தில் நல்ல டீமை மணிரத்னம் சேர்த்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
94 days ago
94 days ago