உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா

படு கவர்ச்சிக்கு மாறப்போகும் ராஷ்மிகா

ஹிந்தியில் கவனம் செலுத்துகிறார் ராஷ்மிகா. அங்கே நடக்கும் பட நிகழ்ச்சிகளுக்கு கவர்ச்சி உடையில் செல்கிறார். அனிமல் படத்தில் சில கவர்ச்சி காட்சிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில், ஹிந்தியில் தயாராகும் காக்டெயில் 2 படத்தில் ஷாகித் கபூருடன் இணைந்து நடிக்கப் போகிறார் ராஷ்மிகா. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடிக்கப் போகிறாராம். ஆனால், தமிழில் யாராவது கவர்ச்சி ரோலுக்கு கேட்டால் மறுத்து விடுகிறாராம்.

ஹிந்தியில் நடிப்பது வேறு, தமிழில் வேறு. நான் சென்னையில் வசித்தவள். வெளியிடத்துக்கு கவர்ச்சியாக செல்லலாம். சொந்த வீட்டில் அப்படி இருக்க முடியுமா என்று தத்துவம் பேசுகிறாராம். தமிழில் சம்பளம் குறைவு என்பதால் அதிக கவனம் செலுத்துவதில்லை. இப்போதைக்கு தெலுங்கு, ஹிந்தியிலேயே ராஷ்மிகா கண் இருக்கிறது என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !