ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி
ADDED : 144 days ago
இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் 2015ம் ஆண்டில் பாகுபலி படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பிறகு 2017ம் ஆண்டில் இதே கூட்டணியில் பாகுபலி இரண்டாம் பாகம் வெளியாகி உலகளவில் ரூ. 1800 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனையை நிகழ்த்தியது.
இந்த நிலையில் 8 வருடங்களுக்கு பிறகு இந்தாண்டு அக்டோபர் மாதத்தில் பாகுபலி படத்தை திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளனர். ஆனால் புதுமுயற்சியாக இரண்டு பாகங்களையும் இணைத்து ஒரே பாகமாக, ஒரே படமாக வெளியிட உள்ளனராம். அதற்கு ஏற்றபடி படத்தை எடிட் செய்து வெளியிட போவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.