லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ADDED : 128 days ago
அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லவ் மேரேஜ்'. இதில் சுஷ்மிதா பட் நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். காதல் கலந்த உணர்வுப்பூர்வமான குடும்ப படமாக உருவாகி உள்ளது.
சத்தமின்றி நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்துள்ளதாம் . இந்த நிலையில் இந்த படத்தை இம்மாத 27ம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.