தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா மற்றும் பலர் நடிக்க இரு தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'தக் லைப்'. இந்தப் படத்தில் நடிகர் ரகுமான் மகள் அலிஷா ரகுமான், உதவி இயக்குனராகப் பணியாற்றி, நாசரின் மகளாக ஒரு காட்சியிலும் நடித்துள்ளார்.
இது குறித்து, தனது இன்ஸ்டா தளத்தில், “சாந்தி….வாய்ப்புக்கு நன்றி மணி சார்,” எனக் குறிப்பிட்டுள்ளார். அலிஷாவுக்கு அவரது சித்தப்பாவும், இசையமைப்பாளருமான ஏஆர் ரகுமான், 'பெஸ்ட் ஆப் லக் டியர், காட் பிளஸ்' என வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏஆர் ரகுமானின் மகள் கதீஜா ரகுமான், ஜிவி பிரகாஷ் தங்கை நடிகை பவானிஸ்ரீ உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகர் ரகுமான் இதற்கு முன்பு மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் மதுராந்தகன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளவர் ரகுமான். எதிர்காலத்தில் அலிஷா நடிப்பைத் தொடர்வாரா, இயக்கத்தில் இறங்குவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.