மேலும் செய்திகள்
பிரச்சனை முடிந்து திரைக்கு வந்தது 'தணல்'
96 days ago
கமல் படத்தில் இணைந்த பிரபல மலையாள எழுத்தாளர்
96 days ago
வட சென்னை பெண்ணாக சாய் பல்லவி
96 days ago
பிரபல மலையாள நடிகர் ஷைன் டான் சாக்கோ தமிழில் பீஸ்ட், குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். இரண்டு தினங்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சிகிச்சை பெறுவதற்காக தனது குடும்பத்துடன் காரில் பயணம் மேற்கொண்டார். இரவு கிளம்பிய இவர்களது கார் காலையில் தர்மபுரி பகுதியில் சென்றபோது விபத்தில் சிக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே ஷைன் டாம் சாக்கோவின் தந்தை பி.சி சாக்கோ பலியானார். மற்றவர்கள் காயமடைந்து தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது திருச்சூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஷைன் டாம் சாக்கோவிற்கு வலது கையில் பலத்த அடிபட்டுள்ளது என்றும் இன்னும் சில தினங்களில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த விபத்து குறித்து ஷைன் டாம் சாக்கோ கூறும்போது, இரவு முழுவதும் என் தந்தை ஜோக் அடித்து எங்களுடன் பேசிக் கொண்டு வந்தார். வழியில் ஆலப்புழாவில் நிறுத்தி இரவு உணவு சாப்பிட்டோம். அதன்பிறகு மாத்திரை போட்டுவிட்டு கொஞ்ச நேரம் நான் தூங்கி விட்டேன். காலையில் விபத்து நடந்த போது தான் எனக்கு விழிப்பு வந்தது. ஆனால் என்ன நடந்தது என்று உணர்ந்து நான் பார்க்கும் போது, என் தந்தை அங்கே உயிருடன் இல்லை” என்று கண்கலங்க பேசியுள்ளார்.
96 days ago
96 days ago
96 days ago