உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் மில்டன் படத்தில் சுனில்

விஜய் மில்டன் படத்தில் சுனில்

தெலுங்கில் காமெடி நடிகராக இருந்த சுனில், ஒரு கட்டத்தில் ஹீரோவாக பல படங்களில் நடித்தார். இப்போது குணசித்திர, வில்லன் நடிகராகவும் நடிக்கிறார். ஜெயிலர் படத்தில் காமெடி ஹீரோவாக, புஷ்பா, மாவீரனில் வில்லனாக நடித்தார். மார்க் ஆண்டனி, குட்பேட் அக்லியும் அவருக்கு நல்ல கேரக்டர். இப்போது விஜய் மில்டன் தமிழ், தெலுங்கில் இயக்கும் படத்தில் சுனில் முக்கியமான கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படத்திலும் எதிர்மறை தன்மை கொண்ட மாறுபட்ட கேரக்டர். இந்த படத்தில் பிக்பாஸ் ஆரி போலீசாக வருகிறார். தெலுங்கு நடிகர் ராஜ் தருண் தமிழில் அறிமுகமாகிறார். இவர்களை தவிர பரத்தும் இருக்கிறார். படத்தின் தலைப்பு ஜூன் 15ல் வெளியாகும் என்கிறார் விஜய் மில்டன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !