பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர்
ADDED : 153 days ago
டாக்கு மகாராஜ் படத்தை அடுத்து பாலகிருஷ்ணா நடித்துள்ள படம் அகண்டா 2. இந்த படம் கடந்த 2021ம் ஆண்டு வெளியான அகண்டா படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். போயபதி ஸ்ரீனு இயக்கி உள்ள இந்த படத்தின் டீசர் பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளான இன்று(ஜுன் 10) வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீசரில் சிவன் அவதாரத்தில் தோன்றுகிறார் பாலகிருஷ்ணா. அதில், என் சிவன் அனுமதி இல்லாமல் எமனால் கூட எனது கண்ணை பார்க்க முடியாது. நீ பார்க்கிறாயா? அப்பாவி உயிரை எடுக்கிறாயா என்று பாலகிருஷ்ணா ஆவேசமாக பேசும் டயலாக் மற்றும் அதிரடி ஆக் ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இமயமலையின் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த டீசரில் கையில் திரிசூலம் ஏந்தி பரமசிவனை போலவே காட்சி கொடுக்கிறார் பாலகிருஷ்ணா. வருகிற செப்டம்பர் 25ம் தேதி இந்த அகண்டா 2 தெலுங்கு, தமிழில் வெளியாகிறது.