மீண்டும் படம் இயக்கி நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்!
ADDED : 318 days ago
ரவி மோகன் நடித்த 'கோமாளி' படத்தில் இயக்குனராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். அதன் பிறகு 'லவ் டுடே' என்ற படத்தை தானே இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன் பிறகு அவர் நடித்த 'டிராகன்' படமும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, டியூட்' என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து மீண்டும் ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்கப்போகிறார் பிரதீப் ரங்கநாதன். இந்தப்படம் சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.