உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது!

சின்னத்திரை நடிகை கண்மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது!


விஜய் டிவியில் வெளியான 'பாரதி கண்ணம்மா' என்ற சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதன் பிறகு ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும், விஜய் டிவியில் வெளியான 'மகாநதி' என பல சீரியலில் நடித்த கண்மணி, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு தனது வளைகாப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை கண்மணி, தற்போது கடந்த ஜூன் 8-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, நாங்கள் இருவரும் ஒரு காதல் கதை எழுதினோம். வாழ்க்கை அதன் தொடர்ச்சியாக ஒரு விஷயத்துடன் எங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. எங்கள் பயணம் ஒரு திருப்பத்துடன் தொடர்கிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை கண்மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !