மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
109 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
109 days ago
தெலுங்கு திரையுலகின் இளம் முன்னணி நடிகரான நானியின் நடிப்பில் சமீபத்தில் ‛ஹிட் 3' என்கிற திரைப்படம் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. இதற்கு முன்னதாக ஏற்கனவே நானி நடிப்பில் ‛தி பாரடைஸ்' என்கிற படம் அறிவிக்கப்பட்டது. விவேக் ஆதிரேயா இயக்கும் இந்த படத்தில் நானி ஒரு புரட்சிகரமான தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பிற்கான வேலைகளும் துவங்கின. இதற்காக ஹைதராபாத் அருகே மிகப்பெரிய அளவிலான பல அரங்குகள் நிர்மாணிக்கும் பணியும் துவங்கியது. இவை அனைத்துமே இந்த படத்தில் பெரும்பாலான இடங்களில் இடம்பெறுகின்றன.
ஆனால் இவற்றை உருவாக்கி முடிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் படப்பிடிப்பு இன்னும் ஏற்கனவே திட்டமிட்டபடி துவங்கப்படாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே வரும் 2026 மார்ச் 27ல் ரிலீஸ் ஆகும் என்றும் அறிவித்தார்கள். இது ராம்சரணின் ‛பெத்தி' திரைப்படம் வெளியாகும் அதே தேதி தான். ஆனால் இதே தாமதம் நீடித்தால் இவர்கள் அறிவித்த அந்த தேதியில் படம் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான் என்கிறார்கள் தெலுங்கு திரை உலகை சேர்ந்தவர்கள்.
109 days ago
109 days ago