மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
103 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
103 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
103 days ago
கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர் அருகில் உள்ள காசிகவுண்டன்புதூரில் பிறந்த சிவகுமாரின் வாழ்க்கை சிறு வயதில் வறுமை நிறைந்ததாக இருந்தது. உறவினர்கள் உதவியால் படித்தார், ஓவிய கல்லூரியில் பட்டம் பெற்றார், பின்னர் சினிமாவுக்கு வந்தார். 1965ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரித்த 'காக்கும் கரங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் ஜூன் 19ம் தேதி வெளிவந்தது. இது சினிமாவில் சிவகுமாருக்கு 60வது ஆண்டு.
100க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்தார், பின்னர் குணசித்ர வேடங்களில் நடித்தார், சின்னத்திரை வரைக்கும் பயணித்தார். இப்போது அவர் மகன்கள் சூர்யா, கார்த்தி இருவரும் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். மூன்று பேருமே தனித்தனி அறக்கட்டளை மூலம் மக்களுக்கும் சேவை செய்து வருகிறார்கள்.
சிவகுமாருக்கு நிறைவான வாழ்க்கைதான் என்றாலும் அவருக்குள் இரண்டு முக்கியமான ஆதங்கங்கள் இருக்கிறது.
அவர் எஸ்.எஸ்.எல்.சி படித்துக் கொண்டிருந்தபோது பள்ளியின் கடைசி நாளில் குரூப் போட்டோ எடுத்தார்கள். அதற்கு 5 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். அந்த 5 ரூபாய் இல்லாததால் அவர் போட்டோ எடுக்க செல்லவில்லை. பின்னாளில் நடிகராக லட்சக்கணக்கான பிலிமில் அவர் உருவம் பதிந்தாலும் அந்த குரூப் போட்டோ பிலிமில் நாம் இல்லையே என்ற ஏக்கம் இப்போதும் அவருக்கு இருக்கிறது.
சிவகுமார் சற்று உயரம் குறைவானவர். இதனால் ஆரம்ப காலகட்டங்களில் அவரை 'குள்ளன்' என்று விமர்சனம் செய்தார்கள், 'சினிமாவுக்கு ஏன் வந்தாய், சர்க்கசிற்கு போ' என்றெல்லாம் கேலி செய்தார்கள். ஆனால் உரிய வயதில் உரிய உயரத்துடன்தான் இருந்தார். சென்னை வந்து படித்த காலத்திலும் சினிமா வாய்ப்பு தேடிய காலத்திலும் 6 அடிக்கு 5 அடி என்ற அளவு கொண்ட அறையில் 7 வருடங்கள் வரை தங்கி இருந்தார். ஒரு மனிதனின் உயரத்தை தீர்மானிக்கும் இளமை வயதில் அவர் குறுகலான அறையில் தங்கி இருந்ததே அவரது உயரக் குறைவுக்கு காரணமானது. இதுவும் சிவகுமார் மனதில் பெரிய ஆதங்கமாக இப்போதும் உள்ளது. சினிமாவிலும், தனிமனித ஒழுக்கத்திலும் சாதித்த சிவகுமாரை வாழ்த்துவோம்.
103 days ago
103 days ago
103 days ago