உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா

அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா

அஜித் குமார் நடித்த தீனா, பில்லா, மங்காத்தா, ஆரம்பம், வலிமை என பல படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இவர்கள் கூட்டணியில் கடைசியாக வலிமை படம் வந்தது. அதிலும் பின்னணி இசையை ஜிப்ரான் கவனித்தார். இந்நிலையில் சமீபத்தில் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. அது குறித்த புகைப்படத்தையும் அவர் தனது வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து யுவன் சங்கர் ராஜா வெளியிட்ட பதிவில், ‛‛ஏ.கேவை சந்தித்தது ரொம்ப சந்தோஷம். நாங்கள் இருவரும் புதிதாக வந்துள்ள கார்களை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். எங்களின் இந்த சந்திப்பு சினிமா சம்பந்தப்பட்டதில்லை. நவீன கார்கள் பற்றிய விசயங்களை அவரிடத்தில் கேட்டறியவே சென்றதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைப்பது சம்பந்தமான சந்திப்பாக கூட இது இருக்கலாம் என்று அஜித் ரசிகர்கள் இந்த சந்திப்பு குறித்து தங்களது யூகங்களை பதிவிட்டு வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !