கவர்ச்சி ஆட்டத்தில் இறங்கிய காயத்ரி
பெங்களூருவைச் சேர்ந்த தமிழ் பெண்ணான காயத்ரி சங்கர், '18 வயது' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளிவரவில்லை. விஜய்சேதுபதியுடன் நடித்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பிறகு 'பொன்மாலைபொழுது, ரம்மி, புரியாத புதிர், காதலும் கடந்து போகும், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், மாமனிதன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பெரும்பாலும் அவர் விஜய்சேதுபதி நடித்த படங்களில்தான் நடித்தார்.
தற்போது அவர் கையில் படம் எதுவும் இல்லை என்று தெரிகிறது. இந்தநிலையில் இன்று வெளியாகி உள்ள 'டிஎன்ஏ' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார். படத்தின் கிளைமாக்சிற்கு முன்னதாக வரும் ஒரு பார் சாங்கில் அவர் கவர்ச்சியான உடை அணிந்து ஆடியுள்ளார். காயத்ரி ஒரு பாடலுக்கு ஆடிய தகவலை படக்குழு ரகசியமாக வைத்திருந்தது. தற்போது பட வெளியீட்டுக்கு பிறகு அது தெரிய வந்திருக்கிறது. குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த காயத்ரி இப்படி கவர்ச்சி அவதாரம் எடுத்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.