உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு!

வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு!


வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த 'வாடிவாசல்' படம் கடந்த சில வருடங்களாக தயாரிப்பில் இருந்தது. சமீபத்தில் இப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் பரவியது. இதையடுத்து தயாரிப்பாளர் தாணுவிற்கு வெற்றிமாறன் புதிய படம் ஒன்றை நடிகர் சிலம்பரசனை வைத்து இயக்கவுள்ளார்.

அதேபோல் சூர்யாவும் தாணுவின் தயாரிப்பில் ஒரு படத்தை நடித்து தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். தற்போது தாணு தயாரிப்பில் சூர்யாவின் படத்தை 'ஆவேசம்' படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இது சூர்யாவின் 47வது படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !