உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை!

ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை!


நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழில் பிஸியான இளம் நடிகராக வலம் வருகிறார். விரைவில் 'அந்தகாரம்' பட இயக்குனர் விக்னாராஜன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளார். இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் இதில் கதாநாயகியாக நடிக்க மலையாள நடிகை அனஸ்வரா ராஜன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இவர் தமிழில் '7ஜி ரெயின்போ காலனி 2' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !