உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்'

சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்'


மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'உஸ்தாத் பகத்சிங்'. இந்த படத்திற்கு பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார் மற்றும் பின்னணிக்கு தமன் இசையமைக்கிறார்.

இதில் கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படம் மார்ச் 26ம் தேதியன்று திரைக்கு வருகிறது என அறிவித்திருந்தனர். தற்போது மார்ச் 19ம் தேதியில் இருந்து 'டாக்சிக்' படம் தள்ளிப்போனதால் 'துரந்தர் 2' படத்திற்கு போட்டியாக 'உஸ்தாத் பகத்சிங்' வருகின்ற மார்ச் 19ம் தேதியன்று திரைக்கு வருகிறது என இன்று அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !