உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'குபேரா' முதல் நாள் வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'குபேரா' முதல் நாள் வசூல்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் ஜுன் 20ல் வெளிவந்த 'குபேரா' திரைப்படம் முதல் நாள் வசூலாக உலக அளவில் 30 கோடியைப் பெற்றுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தெலுங்கில் சுமார் 12 கோடி, தமிழில் 5 கோடி, இதர மாநிலங்களில் 3 கோடி, வெளிநாடுகளில் 10 கோடி வரை வசூலித்திருக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் அமெரிக்காவில் மட்டும் 1.3 மில்லியன் வசூல் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்கள். தமிழை விடவும் தெலுங்கில் இரண்டு மடங்கு அதிகமாக வசூலித்திருப்பது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட வெளியீட்டிற்குப் பிறகு வந்த விமர்சனங்களால் தமிழிலும் தற்போது முன்பதிவு குறிப்பிடும்படி உள்ளதாகச் சொல்கிறார்கள். நேற்றும் இன்றும் விடுமுறை நாட்கள் என்பதாலும் வசூல் முதல் நாளை விடவும் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது. வெகு விரைவில் 100 கோடி வசூல் குறித்த அறிவிப்புகளும் வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !