மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
100 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
100 days ago
வடிவேலு, சிங்கமுத்து காமெடி ஒரு காலத்தில் ரசிக்கப்பட்டது. இப்போதும் அது கோல்டன் காமெடியாக உள்ளது. சிங்கமுத்து ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்ததால் வடிவேலுவுக்கு ஏராளமான சொத்துக்கள் வாங்கி கொடுத்தார். இதில் அவர் பல கோடி மோசடி செய்து விட்டதாக சிங்கமுத்து மீது வடிவேலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் (பணமோசடி), சிங்கமுத்து தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதையடுத்து, வடிவேலுவுக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சிங்கமுத்து மனு தாக்கல் செய்தார். அதில், எனக்கு 67 வயதாகி விட்டது. உடல் நல குறைவால் சிகிச்சை பெற்று வந்தேன். அதனால் வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை. எனவே, ஒருதலைபட்சமான உத்தரவை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தனது முந்தைய உத்தரவை நீக்கி, சிங்கமுத்துக்கு 2500 ரூபாய் அபராதம் விதித்து அதனை வடிவேலுவிடம் கொடுக்க உத்தரவிட்டது.
100 days ago
100 days ago