மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
98 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
98 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
98 days ago
பிரபல பாடகி சின்மயி கணவர் ராகுல், இயக்குனர் மற்றும் நடிகராக உள்ளார். தமிழில் 'மாஸ்கோவின் காவிரி' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர். அதன்பின் 'விண்மீன்கள், வணக்கம் சென்னை, யு டர்ன், தி கிரேட் இந்தியன் கிச்சன்' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் 'சி ல சௌ, மன்மதடு 2,' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது 'தி கேர்ள்பிரண்டு' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த ஆண்டு இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர், நடிகர் ராகுலை தனது சிறந்த நண்பர் எனக் கூறி அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் ரஷ்மிகா.
“ராகுலா….. இன்று உன் பிறந்தநாள்… ஆனால், நான் உனக்கான இந்தக் குறிப்பை எழுதும் போது நீ என் முன் ஒத்திகையில் அமர்ந்திருக்கிறாய்.
நீ மிகவும் விலைமதிப்பற்றவன் என் நண்பா… 'தி கேர்ள்பிரண்ட்' போன்ற ஒரு படத்தை நீ உருவாக்கியுள்ளாய் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. உன்னிடம் உள்ள உணர்ச்சி ஆழம், உன் இதயத்தில் இருக்கும் கருணை ஒவ்வொரு பிரேமிலும் பாய்கிறது.
நான் உன்னை 'தி கேர்ள்பிரண்ட்'டுக்காக சந்தித்தேன். ஒரு இயக்குனர், நண்பர், என்னுடைய குற்றங்களிலும் பார்ட்னர், ஒரு வழிகாட்டியைக் கண்டுபிடித்தேன். அவரை வாழ்நாள் முழுவதும் முழுமையாக நம்புகிறேன்.
பிறந்தநாள் வாழ்த்துகள் ராகுல் சார்…(என் இயக்குனர்)... ராகுலா………(என் நண்பன்)... உனக்கு எப்போதும் மிகப் பெரிய அன்பும் அரவணைப்புகளும்... 'தி கேர்ள்பிரண்ட்'-ஐ பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். இது மிகவும் சிறப்பு…” என மிகவும் நட்பாகப் பதிவிட்டுள்ளார்.
98 days ago
98 days ago
98 days ago