மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
101 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
101 days ago
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
101 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
101 days ago
10 வருடங்களாக சினிமாவில் அங்கீகாரத்திற்காக போராடி வந்த விக்ரமிற்கு மிகப்பெரிய அடையாளமான படம் 'சேது', பாலா இயக்கிய முதல் படம். சிவகுமார், அபிதா, ஸ்ரீமன், ஜோதிலட்சுமி, மனோபாலா, மோகன் வைத்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆர்.ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்தார். ஸர்மதா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கந்தசாமி தயாரித்தார்.
சினிமா விமர்சகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு 50 முறைக்கு மேல் திரையிட்டுக்காட்டப்பட்டு அவர்களால் புறக்கணிக்கப்பட்ட படத்தை மக்கள் கொண்டாடினார்கள். பின்னர் பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றது. தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட் படங்களில் ஒன்றாக அமைந்தது.
படம் வெளியாகி வெள்ளி விழா ஆண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது படத்தை மறு வெளியீடு செய்கிறார்கள். தற்போது இப்படத்தை அதிநவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
101 days ago
101 days ago
101 days ago
101 days ago