உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால்

மாலத்தீவில் குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய காஜல் அகர்வால்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2024ம் வருடம் இந்தியாவின் லட்சதீபத் தீவுகளுக்குச் சென்ற போது அந்த அழகிய தீவுகள் குறித்து பதிவிட்டது பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆனால், அது குறித்து மாலத் தீவு நாட்டின் எம்.பி. ஒருவர் இந்தியா மீது தேவையற்ற விமர்சனங்களை வைத்தார். அதன் பின் மாலத் தீவில் சுற்றுலா செல்வதை நமது மக்கள் தவிர்த்து வந்தனர். அதற்கு முன்பாக நிறைய சினிமா பிரபலங்கள் அங்கு சுற்றுலா செல்வதை விரும்பினர். அடிக்கடி புகைப்படங்களைப் பதிவிட்டு அந்நாட்டு சுற்றுலாவையும் விளம்பரப்படுத்தினர்.

தற்போது மீண்டும் சில சினிமா பிரபலங்கள் அங்கு சுற்றுலா செல்ல ஆரம்பித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளின் பிரபல நடிகையான காஜல் அகர்வால் அவருடைய பிறந்தநாளை மாலத் தீவிற்குச் சென்று குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். கணவர், மகன், தங்கை ஆகியோருடன் இருக்கும் சில புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். மேலும் நீச்சல் உடையில் இருக்கும் போட்டோக்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த வாரம் வெளியாக உள்ள 'கண்ணப்பா' படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் காஜல் அகர்வால். தமிழில் 'இந்தியன் 3' படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படம் எப்போது வெளியாகும் என்பதுதான் அவருக்கும் தெரியாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !