மேலும் செய்திகள்
போலீஸ் அதிகாரியாக அஞ்சு குரியன்
100 days ago
இணையதள தேடல் : தீபிகா படுகோன்
100 days ago
2025ம் ஆண்டின் அரையாண்டு முடிவுக்கு வந்துவிட்டோம். இந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான ஜுன் 27ம் தேதியன்று வெளியாக உள்ள படங்களின் தலைப்புகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் அமைந்த ஒரு போட்டியை ஏற்படுத்தியுள்ளன.
'லவ் மேரேஜ், குட் டே,' என ஆங்கிலத் தலைப்புகளைக் கொண்ட படங்களும், 'மார்கன், திருக்குறள்' என தமிழ்த் தலைப்புகளைக் கொண்ட படங்களும் வெளியாகின்றன. 'காதல் கல்யாணம், நல்ல நாள்' என அந்த ஆங்கிலப் பெயர்களையும் தமிழில் வைத்திருக்கலாம்.
விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மார்கன்' என்ற பட தலைப்பு முதலில் 'ககன மார்கன்' என்று இருந்தது. அப்படியென்றால் 'காற்றின் வழி பயணிப்பவன்' என்று அர்த்தம். 'திருக்குறள்' பற்றியும் திருவள்ளுவர் பற்றியுமான வரலாற்றுப் படமாக 'திருக்குறள்' படம் உருவாகியுள்ளது.
100 days ago
100 days ago