மேலும் செய்திகள்
மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா
99 days ago
மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ?
99 days ago
விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த் நடிப்பில் மே 23ல் திரைக்கு வந்த படம் ஏஸ். ஆறுமுக குமார் இயக்கிய இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வி அடைந்தது. என்றாலும் அதன்பிறகு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிட்டபோது ஓரளவு வரவேற்பு பெற்று வருகிறது. அதன் காரணமாக இந்த படத்தை ஏற்கனவே தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிட்டவர்கள் தற்போது ஹிந்தி, மலையாளம், கன்னட மொழிகளிலும் வெளியிட்டுள்ளார்கள். இதனால் ஆரம்பத்தை விட தற்போது ஓடிடியில் ஏஸ் படத்திற்கு வரவேற்பு அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் சேதுபதியின் இந்த படத்தின் மூலம்தான் கன்னட நடிகை ருக்மணி வசந்த் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் முதல் படமே அவருக்கு தோல்வியாக அமைந்து விட்டது. என்றாலும் அடுத்தபடியாக ஏ.ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தான் நடித்துள்ள மதராஸி படத்தை எதிர்பார்க்கிறார் ருக்மணி வசந்த்.
99 days ago
99 days ago