டூரிஸ்ட் பேமிலி படத்தின் மொத்த வசூல் வெளியானது
ADDED : 94 days ago
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், ரமேஷ் திலக், இளங்கோ குமாரவேல், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான படம் டூரிஸ்ட் பேமிலி. இதை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் 15 கோடி பட்ஜெட்டில் தயாரித்தது. கடந்த மே ஒன்றாம் தேதி திரைக்கு வந்த இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடியது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் மட்டுமின்றி தெலுங்கு நடிகர் நானி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டியிருந்தார்கள். இயக்குனர் அபிஷன் ஜீவிந்தை அழைத்து பலரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் இந்த டூரிஸ்ட் பேமிலி படம் இதுவரை உலக அளவில் 91 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்திருப்பதாக அறிவித்துள்ளார்கள்.